/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜயா எலக்ட்ரானிக்ஸ் வி.ஐ.டி., ஒப்பந்தம்
/
விஜயா எலக்ட்ரானிக்ஸ் வி.ஐ.டி., ஒப்பந்தம்
ADDED : நவ 27, 2024 12:29 AM

சென்னை, சென்னையில் உள்ள வி.ஐ.டி., பல்கலை, புதிய தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், விஜயா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் நேற்று, ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், வி.ஐ.டி., பல்கலை இணை துணை வேந்தர் தியாகராஜன், விஜயா எலக்ட்ரானிக்ஸ் தலைமை தொழில்நுட்ப அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதிக செயல்திறன், குறைந்த ஒலி மற்றும் உகந்த செயல்திறனுக்காக மேம்பட்ட பி.எம்.பி.எல்.டி.சி., மோட்டாரில் நவீனத்தை மேம்படுத்த, வி.ஐ.டி., பல்கலை ஆராய்ச்சி மேற்கொண்டது.
பி.எம்.பி.எல்.டி.சி., மோட்டார், தொழில்நுட்பத் துறையில், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள உதவும். விஜயா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், மோட்டாரின் உற்பத்தி திறன்களை பயன்படுத்தி, புதிய வடிவமைப்புகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

