/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிராம உதவியாளர் பணி: 15க்குள் விண்ணப்பிக்கலாம்
/
கிராம உதவியாளர் பணி: 15க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 04, 2025 02:45 AM
சென்னை கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் காலியாக உள்ள, 20 கிராம உதவியாளர் பணியிடங்களை வேலை அலுவலகம் மற்றும் நேரடி விண்ணப்பம் பெற்றும், பணி நியமனம் மேற்கொள்வது தொடர்பாக, கடந்த 29ம் தேதி அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பில் இருந்து, சில வயது வரம்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதர மற்றும் பொது பிரிவினர், 21 - 32 வயது, பி.சி., - எம்.பி.சி.,க்கு, 21 - 39 வயது, பிற பிரிவினருக்கு, 21 - 42 வயதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம், https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.