ADDED : பிப் 08, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்கம்சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, சென்னை, எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சங்கத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். கிராம உதவியாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான காலத்தை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விதர போராட்டம் நடந்தது.