/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேவல், நாட்டுநாய், கிடாய், காளைகளுடன் வரும் 21ல் 'கிராமத்து திருவிழா' துவக்கம்
/
சேவல், நாட்டுநாய், கிடாய், காளைகளுடன் வரும் 21ல் 'கிராமத்து திருவிழா' துவக்கம்
சேவல், நாட்டுநாய், கிடாய், காளைகளுடன் வரும் 21ல் 'கிராமத்து திருவிழா' துவக்கம்
சேவல், நாட்டுநாய், கிடாய், காளைகளுடன் வரும் 21ல் 'கிராமத்து திருவிழா' துவக்கம்
ADDED : ஆக 14, 2025 11:42 PM
சென்னை :'செம்பொழில்' என்ற பெயரில், நான்கு நாட்களுக்கு கிராமத்து திருவிழா, சென்னை நடந்தனம் ஓய்.எம்.சி.ஏ., அரங்கில், 21ம் தேதி துவங்க உள்ளது.
தொண்டைமான் மண்டலம் அறக்கட்டளை, சென்னை மாநகராட்சி, உழவன் அறக்கட்டளை சார்பில், நான்கு நாட்கள் கிராமத்து திருவிழா கண்காட்சி, வரும் 21ம் தேதி துவங்குகிறது.
முக்கிய நிகழ்வாக, பாரம்பரிய கால்நடை கண்காட்சி நடக்க உள்ளது. கண்காட்சியில் கிளிமூக்கு, விசிறிவால், சண்டை சேவல்கள்; சண்டை கிடாய்கள்; நாட்டு நாய்கள்; ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளிட்ட பங்கேற்க உள்ளன.
இவற்றுக்கான அழகு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தேர்வாகும் மூன்று சேவல்கள், கிடாய்கள், நாட்டு நாய்கள், காளைகளுக்கு, 2,001 முதல் 12,001 ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் கலந்துரையாடல் வாயிலாக, பாடப் புத்தகங்கள் தாண்டிய கற்றலை பெற முடியும். இதனால், குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி என அனைவரும் சேர்ந்து கற்கும் வாய்ப்பை பெறலாம்.
கண்காட்சி 24ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடக்கிறது. அனுமதி சீட்டு அவசியம்.
இதில், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். மேலும், 6 முதல் 15 வயதினருக்கு, 100 ரூபாய்; 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 150 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். டிக்கெட் ஒரு நாளைக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் டிக்கெட் பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு, www.sempozhil.org இணையதளத்தை பார்க்கவும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.