தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., மினி பஸ் இயக்க கோரிக்கை

வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., மினி பஸ் இயக்க கோரிக்கை

வில்லிவாக்கம் - ஐ.சி.எப்., மினி பஸ் இயக்க கோரிக்கை


ADDED : மே 17, 2025 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 12:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லிவாக்கம்,வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட மினி பேருந்தை கூடுதலாக ஐ.சி.எப்., வரை இயக்க கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து, பயணி ரா.கிட்டு, 60, என்பவர் கூறியதாவது:

வில்லிவாக்கம் பேருந்து நிலையம், தற்காலிகமாக ஐ.சி.எப்.,வுக்கு மாற்றப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளதால், வில்லிவாக்கத்தில் இருந்து எம்.டி.எச்., சாலைக்கு செல்லவும், ரயில் நிலையம் மற்றும் ஐ.சி.எப்., பேருந்து நிலையங்களுக்கு செல்லவும் குறைந்தபட்சம், 50 - 100 ரூபாய் வரை ஆட்டோவிற்கு செலவாகிறது.

வில்லிவாக்கத்தில் இருந்து, சிற்றுந்துகள் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, வழித்தடம் எண் '43, 44' என்ற சிற்றுந்துகள், வில்லிவாக்கம் வரை இயக்கப்படுகின்றன.

இதில், புதுார் - வில்லிவாக்கம் செல்லும் '43' வழித்தடம் பேருந்து, வில்லிவாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், புதிதாக மாற்றப்பட்ட ஐ.சி.எப்., பேருந்து நிலையத்திற்கு செல்ல, மீண்டும் மற்றொரு பேருந்து அல்லது ஆட்டோவை தேட வேண்டிய நிலை நிலவுகிறது.

அதேசமயம். ஜி.கே.எம்., காலனி - ஐ.சி.எப்., செல்லும் 44 வழித்தட சிற்றுந்து ஒன்று மட்டுமே இருப்பதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, 43 வழித்தட சிற்றுந்தை, வில்லிவாக்கத்தில் இருந்து ஐ.சி.எப்., வரை இயக்கவும், கூடுதல் சிற்றுந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us