/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விம்கோ நகர் - வீஞ்சூர் மினி பஸ் சேவை கோரிக்கை
/
விம்கோ நகர் - வீஞ்சூர் மினி பஸ் சேவை கோரிக்கை
ADDED : அக் 24, 2024 12:34 AM
மணலிபுதுநகர், விமான நிலையத்தில் இருந்து வடசென்னையின் விம்கோ நகர் பணிமனை வரை, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோருக்கு மெட்ரோ ரயில் மிக பிரதானமாக உள்ளது.
விம்கோவில் இருந்து மணலி வழியாக மாதவரத்துடனும், மணலிபுது நகர் - மணலி வழியாக மாதவரத்துடனும் மெட்ரோ ரயில் பாதையை இணைக்க வேண்டும் என, இரு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மணலிபுதுநகர், 7 கி.மீ., துாரமும், விச்சூர், 10 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது.
இங்கிருந்து போதுமான மாநகர பேருந்து வசதிகளும் கிடையாது.
இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோக்களும் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர்.
இதனால், இப்பகுதியினர் கடும் அவதியுறுகின்றனர்.
எனவே, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் - ஐ.டி.சி.,யில் இருந்து, எர்ணாவூர் மேம்பாலம், மணலி விரைவு சாலை, ஜோதி நகர் சந்திப்பு, சடையங்குப்பம் மேம்பாலம், சடையங்குப்பம், மணலிபுதுநகர், பால் பூத் வழியாக, விச்சூரை இணைக்கும் வகையில், மினி பஸ் சேவை அவசியம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.