sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு

/

 விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு

 விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு

 விதிமீறல் இணையதள கம்பம்: நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் அபராதம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,000 ஆக குறைப்பு


UPDATED : ஜன 31, 2026 07:31 AM

ADDED : ஜன 31, 2026 05:22 AM

Google News

UPDATED : ஜன 31, 2026 07:31 AM ADDED : ஜன 31, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அனுமதியின்றி நடப்படும் தனியார் நிறுவன இணையதள கம்பங்களுக்கான அபராதம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கண்டபடி கேபிள்கள் சுற்றி தொங்கும் கம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

இதில், கமிஷனர் குமரகுருபரன், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 113 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



சாலை வெட்டு



அதில், தனியார் இணைய தள நிறுவனங்கள், இஷ்டம்போல் கம்பங்கைளை நட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம்:

இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள், 1.90 லட்சம் கம்பங்கள் நட்டு சேவையை வழங்கி வருகின்றன. அனுமதியின்றி கம்பம் நட்டால், ஒரு கம்பத்திற்கு, 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

அபராத தொகையை செலுத்த பெறு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்ததால், கட்டண தொகை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதியின்றி இணையதள சேவை கம்பம் நட்டால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

வைப்பு தொகையாக, 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என, பெரு நிறுவனங்களுக்கு மாநகராட்சி தாராளம் காட்டியுள்ளது.

சென்னையில் ஏற்கனவே, பைபர் நெட் உள்ளிட்ட இணைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள், இஷ்டம்போல் கம்பங்களை நட்டும், கேபிள்களை கண்டபடி தொங்கவிட்டும் உள்ளன.

தற்போது அபராதம் குறைப்பால், இத்தகைய கம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து, விபத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

சென்னையில் அனுமதியின்றி சாலை வெட்டு பணியில் ஈடுபட்டால், பேருந்து சாலைகளுக்கு 2 லட்சம் ரூபாய்; உட்புற சாலைகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போலீசிலும் புகார் அளிக்கப்படும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

கெடுபிடி வேண்டாம்


கூட்டத்தில் நடந்த விவாதம்:

ஜெயராமன், 4வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்: சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தும், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகளை அகற்றி, அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். இந்த நடவடிக்கை தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

துணை மேயர் மகேஷ் குமார்: அபராதம் விதிப்பது மாநகராட்சியின் நோக்கமல்ல; சாலையோர வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துகிறோம். கெடுபிடி காட்ட வேண்டாம் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.



அம்பேத்வளவன், 73வது வார்டு வி.சி., கவுன்சிலர்: என் வார்டில் 24 மணி நேரமும் பிரியாணி கடைகள் செயல்படுகின்றன.

அங்கு வருவோர், தடை செய்யப்பட்ட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.



மேயர் பிரியா: சென்னையில், சில கடைகள் 24 மணி நேரம் செயல்பட உரிமை உள்ளது. அப்பகுதியில் ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மயான பூமிகள் தனியார்மயம்
திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் உள்ள மயான பூமிகளை, தனியார் நிறுவனங்கள் பராமரிக்க, மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.



மேயருக்கு பதவி உயர்வு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் பாத்திமா பேசுகையில், ''இங்கு கவுன்சிலர்களாக இருக்கும் பலர் எம்.எல்.ஏ.,வாக போட்டியிட உள்ளனர். மேயர் பிரியா, எம்.எல்.ஏ.,வாக பதவி உயர்வு பெற உள்ளார்,'' என்றார். உடனே மற்ற கவுன்சிலர்களும், 'துணை மேயர் மகேஷ்குமாரும் எம்.எல்.ஏ.,வாக பதவி உயர்வு பெற உள்ளார்' என்றனர்.



தி.மு.க., அரசுக்கு பா.ஜ., பாராட்
உமா ஆனந்தன், 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர்: நான் பா.ஜ.,வை சேர்ந்தவர் என்றாலும், என் வார்டு மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, இந்த அரசு உறுதுணையாக இருந்துள்ளது. இதனால், 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதற்காக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரண்டாவது முறை மக்கள் வாய்ப்பளித்தால், மீதமுள்ள பணிகளையும் நிறைவேற்றுவேன். மேற்கு மாம்பலம் பகுதியில், எல்.கே.அத்வானி பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவில்லை. இவ்வாறு அவர் பேசினார். அரசையும், மாநகராட்சியையும் உமா ஆனந்தன் பாராட்டியதை, தி.மு.க., கவுன்சிலர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.



பூங்காக்கள் பராமரிப்பு; மாநகராட்சி ஏற்பு
மாநகராட்சியில் 781 பூங்காக்களில், பிரதான பூங்காக்கள் தனியார் பராமரிப்பில் இருந்தன. அவற்றை இனி மாநகராட்சியே பராமரிக்க உள்ளது. இதற்காக, 2,210 பூங்கா பராமரிப்பாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.








      Dinamalar
      Follow us