/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபால்: ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி மாணவியர் வெற்றி
/
வாலிபால்: ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி மாணவியர் வெற்றி
ADDED : ஆக 12, 2025 12:34 AM

சென்னை,
பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஜெஸ்ஸி மோசஸ் அணி 2 ----- 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம், எஸ்.ஏ.என்., அகாடமி இணைந்து, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 7வது மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் வாலிபால் மைதானத்தில், நேற்று துவக்கின.
இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள 27 மாணவர்கள் மற்றும் 16 மாணவியர் அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் மாணவர் பிரிவில் முதல் போட்டியில், ஜெய்கோபால் கரோடியா மணலி நியூ டவுன் பள்ளி அணி, கோடம்பாக்கம் எம்.எச்.ஆர்., மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின.
இதில், ஜெய்கோபால் கரோடியா பள்ளி அணி 25 - 15, 25 - 18 என்ற செட் கணக்கில், எம்.எச்.ஆர்., பள்ளி அணியை வீழ்த்தியது.
அடுத்து நடந்த மாணவியருக்கான முதல் போட்டியில், அண்ணா நகர் ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி அணி, கீழ்ப்பாக்கத்தின் கோல சரஸ்வதி வைஷ்ணவ் பள்ளி அணியை எதிர்த்து மோதியது.
இதில் அசத்திய ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி அணி மாணவியர், 21 - -25, 25 - -21, 27- - 25 புள்ளி யில், 2 - 1 என்ற செட் கணக்கில், கோல சரஸ்வதி வைஷ்ணவ் பள்ளி அணியை வீழ்த்தி, வெற்றியுடன் ஆட்டத்தை துவங்கியது.