/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபால்: நெல்லிக்குப்பம் அரசு பள்ளி வெற்றி
/
வாலிபால்: நெல்லிக்குப்பம் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 11, 2025 12:28 AM

சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், நெல்லிக்குப்பம் அரசு பள்ளி அணி, டவுட்டன் ஒய்.எம்.சி.ஏ., அணியை தோற்கடித்தது.
விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன், சென்னை கேம்பஸ் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான விளையட்டு போட்டிகள், திருப்போரூர் அடுத்த பையனுாரில் உள்ள பல்கலையில் நடக்கின்றன.
ஆண்களுக்கான கால்பந்து, பெண்களுக்கான எறிபந்து, இருபாலருக்கான வாலிபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த ஆண்களுக்கான வாலிபால் நாக் அவுட் போட்டியில், நெல்லிக்குப்பம் அரசு பள்ளி, 25 - 10, 25 - 12 என்ற கணக்கில் டவுட்டன் ஒய்.எம்.சி.ஏ., அணியையும், செயின்ட் பீட்டர்ஸ் அணி, 25 - 7, 25 - 8 என்ற கணக்கில், திருப்போரூர் அரசு பள்ளியையும் தோற்கடித்தன.
பெண்கள் பிரிவில், வித்யோதயா அணி, 25 - 8, 25 - 12 என்ற கணக்கில் மெல்ரோசாபுரம் சி.எஸ்.இ., அணியையும், வேலம்மாள் வித்யாலயா அணி, 25 - 5, 25 - 9 என்ற கணக்கில், குரோம்பேட்டை என்.எஸ்.என்., அணியையும் வீழ்த்தின.
எறிபந்து ஆட்டத்தில், புவனா கிருஷ்ணா பள்ளி அணி, 15 - 6, 15 - 7 என்ற கணக்கில், பள்ளிக்கரணை சான் அகாடமி அணியையும், செயின்ட் மேரிஸ் அணி, 15 - 0, 15 - 9 என்ற கணக்கில், திருப்போரூர் அரசு பள்ளியையும் தோற்கடித்து வெற்றி பெற்றன.
கால்பந்தில், செட்டிநாடு பள்ளி அணி, 3- 1 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் போதி கேம்பஸ் அணியையும், டி.ஏ.டி., பள்ளிக்கரணை அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில் குரோம்பேட்டை என்.எஸ்.என்., பள்ளி அணியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.