/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பம்மல் சங்கரா மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சந்திப்பு விழா
/
பம்மல் சங்கரா மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சந்திப்பு விழா
பம்மல் சங்கரா மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சந்திப்பு விழா
பம்மல் சங்கரா மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சந்திப்பு விழா
ADDED : டிச 08, 2024 12:21 AM

பல்லாவரம், பல்லாவரம் அடுத்த பம்மலில், சங்கரா கண் மருத்துவமனையில், தன்னார்வலர்கள் சந்திப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக, தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் வி.கருணாநிதி பங்கேற்று பேசுகையில், ''சங்கரா மருத்துவமனை அறங்காவலர் விஸ்வநாதன், 88 வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
''அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனை, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது,'' என்றார்.
சென்னை, ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளியின் ஆசிரியரும், ஆன்மிக பேச்சாளருமான எஸ்.கார்த்திக்நாராயணன் பேசியதாவது:
அன்னதானம், வஸ்திரதானம், வித்யா தானத்திற்கு மூலமாக இருக்கும் சரீர கைங்கரியத்தில், சங்கரா மருத்துவமனை ஈடுபடுவது பெருமைக்குரியது.
ஓரிடத்தில் மருத்துவ முகாம் அமைத்து, அங்கு வருவோரிடம், அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து வருகிறீர்கள். அனைவருக்கும் சேவை சென்று சேர வேண்டும், அவர்கள் வருகைக்கு ஏற்ப வண்ணம் கொடுக்க வேண்டும் என்ற தர்ம சிந்தனையில் இந்த மருத்துவமனை செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்கரா கண் மருத்துவமனை அறங்கா வலரும், செயலருமான விஸ்வநாதன் பேசுகையில், ''சங்கரா கண் மருத்துவமனை துவங்கி 30 ஆண்டுகளாகிறது.
இதுவரை 3 லட்சத்திற்கு மேல் கண் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இதில், 80 சதவீதம் ஏழை எளிய மக்களுக்கு, இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையுடன், வரும் காலங்களில் நல்ல காரியம் செய்வோம்,'' என்றார்.