/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
/
தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : டிச 06, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சங்கரா கண் மருத்துவமனை அறங்காவலர் குழு சார்பில், 'தன்னார்வலர்கள் சந்திப்பு - 2025' நிகழ்ச்சி, இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியர் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு ஸ்ரீ சத்ய சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன், சென்னை, பம்மல் பகுதியில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் நடக்கும் இந்த சந்திப்பில், சிறப்பு விருந்தினராக, 'ரோட்டரியன்' முன்னாள் மாவட்ட ஆளுநர் முத்து பழனியப்பன் பங்கேற்கிறார்.
தன்னார்வலர்கள் தொடர்ந்து சேவை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 2025ம் ஆண்டு கிராம தன்னார்வலர்கள் சந்திப்புக்கு, அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

