/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' மோடி ' கோப்பை கால்பந்து பைனலில் வேல்ஸ் அணி தகுதி
/
' மோடி ' கோப்பை கால்பந்து பைனலில் வேல்ஸ் அணி தகுதி
' மோடி ' கோப்பை கால்பந்து பைனலில் வேல்ஸ் அணி தகுதி
' மோடி ' கோப்பை கால்பந்து பைனலில் வேல்ஸ் அணி தகுதி
ADDED : ஆக 19, 2025 12:34 AM

சென்னை, 'மோடி' கோப்பைக்கான தென்மாநில கால்பந்து போட்டியில், பெண்களில் வேல்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மோடி கோப்பைக்கான தென்மாநில கால்பந்து போட்டியை, செங்கல்பட்டு, எப்.சி., மெட்ராஸ் மைதானத்தில் நடத்துகின்றன.
போட்டியில், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களில் 16 அணிகளும், பெண்களில் எட்டு அணிகளும் பங்கேற்று உள்ளன.
நேற்று காலை, பெண்களுக்கான காலிறுதி சுற்றில், எம்.ஓ.பி. வைஷ்ணவா மற்றும் ஜேப்பியார் அணிகள் மோதின. அதில், 3 - 1 என்ற கணக்கில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு போட்டியில், ராணி மேரி மற்றும் எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா அணிகள் எதிர்கொண்டன. ஆட்ட முடிவில், 11 - 0 என்ற கணக்கில் எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஏற்கனவே காலிறுதியில் வெற்றி பெற்ற வேல்ஸ் மற்றும் எத்திராஜ் அணிகள், முதல் அரையிறுதியில் நேற்று மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்தே வேல்ஸ் அணி அதிரடியாக விளையாடி, 6 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.