/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார் மண்டலத்தில் வார்டு சபை கூட்டம் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
/
ஆலந்துார் மண்டலத்தில் வார்டு சபை கூட்டம் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
ஆலந்துார் மண்டலத்தில் வார்டு சபை கூட்டம் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
ஆலந்துார் மண்டலத்தில் வார்டு சபை கூட்டம் தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 11, 2024 12:20 AM
ஆலந்துார், ஆலந்துார் மண்டலம் முழுதும் வார்டு சபை கூட்டம் நேற்று நடந்தது.
சென்னை மாநகராட்சியில் ஆலந்துார் மண்டலத்தில் உள்ள, 12 வார்டுகளிலும் சபை கூட்டம் நடந்தது. மண்டல குழுதலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி, குடிநீர், மின்வாரிய, சுகாதார பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
வார்டுசபை கூட்டத்தில், நலச்சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்,ராமாராவ் தலைமையில் வைக்கப்பட்ட கோரிக்கைள்:
பழவந்தாங்கல், 5வது பிரதான சாலை இணைக்கப்பட வேண்டும்
மண்டலம் முழுதும் மின்கேபிள் பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
ஒவ்வொரு வார்டிலும் நுாலகம் அமைக்க வேண்டும்
பல்லாவரத்தில் தண்ணீர் மாசு கலந்ததை போல, மற்ற இடங்களில் இப்பிரச்னை ஏற்படாமல் இருக்க பிரதான குழாயில் தெருக்களுக்கு தண்ணீர் குழாய் பிரியும் பகுதியில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்
நங்கநல்லுார், நான்காவது பிரதான சாலை உள்ளிட்ட பெரும்பாலான பிரதான சாலைகளில் மக்கள் நடந்து செல்லமுடியாத வகையில் நடைபாதை கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை வரன்முறைப்படுத்த வேண்டும்
ஆலந்துார் மண்டலத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர வேண்டும்
பணிபுரியும் பெண்களுக்கு நங்கநல்லுார், ஆதம்பாக்கம் பகுதியை இணைத்து மாநகராட்சி விடுதி அமைக்க வேண்டும்
மூத்த குடிமக்கள் ஒன்று கூடி பொழுதை கழிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மாதிரி கூடம் அமைக்க வேண்டும்.
தவிர பொதுமக்கள் தரப்பில் மின் கம்பங்கள்இடமாற்றம், குடிநீர் பிரச்னை, கழிவுநீர் அடைப்பு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரப்பட்டன.