/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறையில் கைதி தாக்கப்பட்டாரா? மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவு
/
சிறையில் கைதி தாக்கப்பட்டாரா? மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவு
சிறையில் கைதி தாக்கப்பட்டாரா? மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவு
சிறையில் கைதி தாக்கப்பட்டாரா? மாஜிஸ்திரேட் விசாரிக்க உத்தரவு
ADDED : டிச 04, 2024 11:59 PM
சென்னை,திருவொற்றியூரைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் உள்ள தன் மகனை தாக்கிய சிறை அதிகாரிக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரியிருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிசார் அகமது ஆஜராகி, ''ஆனந்தியின் மகன் ஜெயந்தன் என்பவரை, சிறை அதிகாரி பிரசாந்த் பாண்டியன் என்பவர் தாக்கியதில், காயங்கள் ஏற்பட்டுள்ளது. சுயநினைவின்றி இருந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
புழல் சிறைக்கு சென்று, மகனை சந்தித்துள்ளார். முகத்திலும், வலது கண் அருகிலும் காயங்கள் இருந்துள்ளன. சிறை எஸ்.பி.,யை சந்திக்க, ஆனந்தியை அனுமதிக்கவில்லை,'' என்றார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தில், அழுத்தம் உள்ளது.
குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிய, சிறையில் இருக்கும் ஜெயந்தனை சந்தித்து, விசாரித்து, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து, தன் கருத்தையும் சேர்த்து அறிக்கை அளிக்கும்படி, திருவள்ளூர் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்படுகிறது.
சிறை அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் பெறக்கூடாது. அறிக்கையை, வரும் 17ம் தேதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.