ADDED : பிப் 04, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர்:திருநின்றவூர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகுந்தன், 38; பெயின்டர். அவரது மகன் தருண், 13. இவர், திருநின்றவூர், கோமதிபுரம் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் தருண் நண்பர்களுடன், பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, புதர்மண்டிய பகுதியில் இருந்து விஷ ஜந்து ஒன்று உள்ளங்காலில் கடித்துள்ளது.
வலியால் துடித்த தருண், உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில், சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை பாம்பு ஏதும் கடிக்கவில்லை என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.