sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தனியார் கட்டுமான நிறுவனத்திற்காக கோயம்பேடு சுடுகாட்டை மேம்படுத்தவில்லையா? மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

/

தனியார் கட்டுமான நிறுவனத்திற்காக கோயம்பேடு சுடுகாட்டை மேம்படுத்தவில்லையா? மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

தனியார் கட்டுமான நிறுவனத்திற்காக கோயம்பேடு சுடுகாட்டை மேம்படுத்தவில்லையா? மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

தனியார் கட்டுமான நிறுவனத்திற்காக கோயம்பேடு சுடுகாட்டை மேம்படுத்தவில்லையா? மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு


ADDED : நவ 11, 2025 12:39 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடம்பாக்கம்: தனியார் கட்டுமான நிறுவனத்திற்காக, கோயம்பேடு சுடுகாட்டை மேம்படுத்தாமல் உள்ளதாகவும், வீடு, வீடாக சேகரிக்கும் பழைய சோபா, மெத்தை உள்ளிட்ட குப்பையை கொட்ட இடம் இல்லை எனவும், கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

கோடம்பாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

லோகு, தி.மு.க., 127வது வார்டு: கோயம்பேடு நியூ காலனியில், கூவம் கரையோரம் சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாட்டை நவீனமாக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன்.

அங்கு, எரிவாயு தகன மேடை அமைக்க, மேயர் நிதியில் 2 கோடி ரூபாய் தருவதாக உறுதியளிக்கப்பட்டும், இன்னும் சீரமைக்கவில்லை. அந்த பணியை செய்ய முடியுமா முடியாதா? என, எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.

இந்த சுடுகாடு அருகே, 'பாஷ்யம்' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறை இடத்தை சாலையாக காண்பித்து, திறந்த வெளி நிலம் விடப்பட்டுள்ளது.

அதற்கு, எவ்வாறு அனுமதி அளித்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு இன்னும் ஏற்படுத்தவில்லை.

சுடுகாடு அருகே கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுகள் அனைத்தும் சுடுகாட்டிற்கு வந்து விடுகிறது. இதனால், அங்கு ஒரு குழி கூட தோண்ட முடியவில்லை.

நீங்கள் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள் என்றால், நானும் அ.தி.மு.க.,வினரும், அந்த அடுக்குமாடி குடிருப்பு நிறுவனத்திடம் பணம் வாங்கி கொள்ளட்டுமா?

கண்ணன், தி.மு.க., 138வது வார்டு: தேர்தல் வர உள்ளது. பணிகளை விரைந்து முடித்தால் தான், மக்களை சந்திக்க முடியும். நாங்கள் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றால், அதிகாரிகளான நீங்கள் சரியாக செயல்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

ரவிசங்கர், தி.மு.க., 129வது வார்டு: மழைக்காலத்தை எதிர்பார்த்து நாம் தயாராக இருந்ததால், மழை நம்மை கண்டு ஓடிவிட்டது என நினைக்க தோன்றுகிறது.

விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் அதிகமான முதியோர் வசிக்கின்றனர். அவர்களை முதியோர் இல்லத்தில் மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடு, வீடாக சேகரிக்கும் சோபா, மெத்தை உள்ளிட்ட குப்பையை கொட்ட, வார்டில் இடம் இல்லை; அதை ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் சேர்க்கை மந்தமாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்ரமணி, ம.தி.மு.க., 139வது வார்டு: மேற்கு ஜோன்ஸ் சாலையில், பேருந்து நிறுத்தம் கட்டும் பணிக்காக, பழைய நிழற்குடை அகற்றப்பட்டது. அதை மீண்டும் கட்டும் பணி துவங்கப்படவில்லை.

பிள்ளையார் கோவில் தெரு, அப்பாதுரை தெருவில் 200 மீட்டருக்கு பாதாள சாக்கடையில் அடைப்பு உள்ளது. அதனால், அப்பகுதி குழாயை மாற்றி அமைக்க வேண்டும்.

தனசேகர், தி.மு.க., 137வது வார்டு: எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளத்தில் 11வது தெருவில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணியால், சாலை அமைக்க முடியாமல் இருந்தது.

தற்போது, பணிகள் முடித்து சாலையை ஒப்படைத்துள்ளனர். அதனால், விரைந்து சாலை அமைக்க மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.

உமா ஆனந்த், பா.ஜ., 134 வது வார்டு: மேற்கு மாம்பலத்தில் 20 - 25 அடி சாலையை ஆக்கிரமித்து இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நெரிசல் ஏற்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் ஆர்.ஓ., யூனிட் வழங்க அரசு அறிவித்தது. ஆனால், அதை பராமரிக்க நிதி ஒதுக்கவில்லை.

ஸ்டெல்லா, தி.மு.க., 128வது வார்டு: வார்டில் சாலையோர கடைகள் அதிகரித்துள்ளன. அதற்கு யாரோ பணம் வசூலிக்கின்றனர். அதை கட்டுப்படுத்த வேண்டும்.

மின் விளக்குகள் வெளிச்சம் குறைவாக உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும். பூங்கா பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால், பணிக்கு ஆட்களை நியமிக்கவில்லை.

ஸ்ரீதர், தி.மு.க., 140வது வார்டு: சி.எம்.டி.ஏ., சார்பில் 'அம்மா' பூங்காவை மேம்படுத்தும் பணி, கடந்த ஜூலை மாதம் துவங்கப்பட்டது. ஆனால், அந்த பணிகள் நடக்கவில்லை. நாங்கள் பணியை நிறுத்தியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us