/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறையில் ரவுடி மீது தாக்குதல் நடந்ததா? 'சிசிடிவி' பதிவை தாக்கல் செய்ய உத்தரவு
/
சிறையில் ரவுடி மீது தாக்குதல் நடந்ததா? 'சிசிடிவி' பதிவை தாக்கல் செய்ய உத்தரவு
சிறையில் ரவுடி மீது தாக்குதல் நடந்ததா? 'சிசிடிவி' பதிவை தாக்கல் செய்ய உத்தரவு
சிறையில் ரவுடி மீது தாக்குதல் நடந்ததா? 'சிசிடிவி' பதிவை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : மே 15, 2025 12:38 AM
சென்னை :புழல் சிறையில் வார்டனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ரவுடி நாகேந்திரனின் சகோதர் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சம்பவம் நடந்த நாளில் பதிவான, 'சிசிடிவி' காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவுடி நாகேந்திரன். இவரது சகோதரர் முருகன். ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் கைதாகி, புழல் சிறையில் உள்ளார். குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தன் கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முருகன் மனைவி சுகந்தி தாக்கல் செய்த மனு:
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் கணவரை, ஒரு மாதத்திற்கு முன் சிறையில் சென்று பார்த்தேன்.
சிறை வார்டன் கார்த்திக், கணவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் உடலில் பல்வேறு இடங்களில் கடும் காயங்கள் உள்ளன. பற்களும் உடைக்கப்பட்டு உள்ளன.
கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். வார்டன் கார்த்திக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், 'ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில், சம்பவம் தொடர்பான, 'சிசிடிவி' காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், மனுதாரரின் கணவரை தாக்கியது எதற்கு என கேள்வி எழுப்பி, முருகனுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.
சம்பவம் தொடர்பான, 'சிசிடிவி' காட்சிகளை சிறை அதிகாரிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
***