/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவேற்காடு நகராட்சியின் அலட்சியத்தால் ஒரு மாதமாக வீட்டில் தேங்கும் கழிவு நீர்

ADDED : ஏப் 02, 2025 11:47 PM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சி, 12ம் வார்டு, கே.பி.எஸ்.நகர் நான்கு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள நான்கு தெருக்களில் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு, பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. தற்போது, பல இடங்களில் வடிகால் சேதமடைந்து, ஆபத்தான வகையில் காட்சியளிக்கிறது. இரவு வேளைகளில், வாகன ஓட்டிகள் வடிகாலில் விழும் ஆபத்து உள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் வடிகாலில் மண் குவிந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளுக்கு நாள் வலுவிழந்து, வடிகால் பூமியில் புதையும் வகையில் உள்ளது.
இந்நிலையில், மேற்கூறிய கே.பி.எஸ்., நகர் 4வது தெருவில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவு நீர் ஸ்ரீனிவாசன் என்பவரது வீட்டு வாசலில் தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதமாக சொல்லொண்ணா துயரத்தில் அவர் உள்ளார்.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் புது வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விசாரிக்க நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தியை தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.