/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர், கழிவுநீர் திட்ட பணி ரூ.177 கோடியில் துவக்கம்
/
குடிநீர், கழிவுநீர் திட்ட பணி ரூ.177 கோடியில் துவக்கம்
குடிநீர், கழிவுநீர் திட்ட பணி ரூ.177 கோடியில் துவக்கம்
குடிநீர், கழிவுநீர் திட்ட பணி ரூ.177 கோடியில் துவக்கம்
ADDED : மார் 17, 2024 12:46 AM
சென்னை:திரு.வி.க., மண்டலம், 64, 65, 68 ஆகிய மண்டலங்களில், கழிவுநீர் திட்டத்திற்கு, 51.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 20 கி.மீ., துாரத்தில், 250, 300, 400 ஆகிய மி.மீ., விட்டம் உடைய குழாய் பதிக்கப்படுகிறது. மொத்தம், 734 இயந்திர நுழைவாயில் அமைக்கப்படும்.
இத்திட்டம் வாயிலாக, 15,000 குடும்பங்களை சேர்ந்த, 62,000 பேர் பயன் அடைவர்.
தண்டையார்பேட்டை மண்டலம், 47வது வார்டில், 18 கோடி ரூபாயில் குடிநீர் திட்ட பணிகள் நடக்கின்றன. இதில், 2.4 கி.மீ., நீளத்தில், 150, 200, 300, 450 மி.மீ., விட்டம் உடைய, குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.
மேலும், 1 கோடி லிட்டர் கொள்ளளவில் கீழ்நிலை தொட்டியும், 30 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டியும் கட்டப்பட உள்ளது. இத்திட்டம் வாயிலாக, 1.28 லட்சம் பேர் பயன் அடைவர்.
மணலி மண்டலம், 15வது வார்டில், 1.59 கோடி ரூபாயில், 1.5 கி.மீ., நீளத்தில், 100 மி.மீ., விட்டம் உடைய குழாயை, 600 மி.மீ., விட்டம் உடைய குழாயுடன் இணைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தால், 6,930 பேர் பயன் அடைவர்.
அம்பத்துார் மண்டலம், 84வது வார்டில், 9.99 கோடி ரூபாயில், கீழ்நிலை குடிநீர் தொட்டிக்கு, 3.5 கி.மீ., நீளத்தில், 500 மி.மீ., விட்டம் உடைய குழாய் இணைக்கப்பட உள்ளது. இதில், 1 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படும். இத்திட்டம் வாயிலாக, 50,000 பேர் பயன் அடைவர்.
தேனாம்பேட்டை மண்டலம், 109, 110, 111, 112, 113, 115, 116, 118 மற்றும் 119 ஆகிய வார்டுகளில், 80 கோடி ரூபாயில், 45 கி.மீ., நீளத்தில், கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும், 1,493 இயந்திர நுழைவாயில்கள், 12 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோடம்பாக்கம் மண்டலம், 131, 138, 140 ஆகிய வார்டுகளில், 6.60 கோடி ரூபாயில், 4 கி.மீ., நீளத்தில், குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இத்திட்டம் வாயிலாக, 744 குடும்பங்களைச் சேர்ந்த 7,000 பேர் பயன் அடைவர்.
அதே மண்டலம், 131, 140 ஆகிய வார்டுகளில், 6.70 கோடி ரூபாயில், 2.5 கி.மீ., நீளத்தில், கழிவுநீர் உந்து குழாய் பதிக்கப்பட உள்ளது. மேலும், இரண்டு கழிவுநீர் சேகரிப்பு கிணறுகள், இரண்டு கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் வாயிலாக, 3,000 பேர் பயன் அடைவர்.
பெருங்குடி மண்டலம், 186வது வார்டு, 3.48 கோடி ரூபாயில் புழுதிவாக்கம், வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில், 1.8 கி.மீ., நீளத்தில், குடிநீர் குழாய் பதிக்கப்பட உள்ளது. இத்திட்டம் வாயிலாக, 88,000 பேர் பயன் அடைவர்.
இந்த திட்ட பணிகள், நேற்று முன்தினம் துவங்கின. குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

