தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீர் வாரிய அலுவலகம் முற்றுகை

குடிநீர் வாரிய அலுவலகம் முற்றுகை

குடிநீர் வாரிய அலுவலகம் முற்றுகை


UPDATED : நவ 19, 2026 09:33 PM

ADDED : நவ 19, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 09:33 PM ADDED : நவ 19, 2026 09:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆறு மாதங்களாக, சம்பளம் வழங்கப்படாததால், தமிழ்நாடு குடிநீர் வாரியம் தலைமை அலுவலகத்தை, ஆய்வக ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக, பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் வாரியம் கீழ் உள்ள, குடிநீர் பரிசோதனை ஆய்வகங்களில், 1,400க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ், அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டதால், கடந்த ஆறு மாதங்களாக, அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.

இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவு, குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு, புகார் மனுக்களை அனுப்பினர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் காமராஜர் சாலையில் உள்ள, குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட, நேற்று காலை நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் வந்தனர். போராட்டத்தில் ஈடுபட வந்த, ஒப்பந்தத் தொழிலாளர்களை பிடித்து, எழிலகம் வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவில் அருகே அமர வைத்தனர். முக்கிய நிர்வாகிகள் சிலரை, குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்திற்கு, அழைத்து சென்றனர். அங்கு, தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜை சந்தித்தனர். இம்மாதம் 30ம் தேதிக்குள் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, ஒப்பந்த ஊழியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us