/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய அதிகாரி பணியிடங்கள் காலி பருவமழையை எதிர்கொள்வதில் சிக்கல்
/
குடிநீர் வாரிய அதிகாரி பணியிடங்கள் காலி பருவமழையை எதிர்கொள்வதில் சிக்கல்
குடிநீர் வாரிய அதிகாரி பணியிடங்கள் காலி பருவமழையை எதிர்கொள்வதில் சிக்கல்
குடிநீர் வாரிய அதிகாரி பணியிடங்கள் காலி பருவமழையை எதிர்கொள்வதில் சிக்கல்
ADDED : செப் 28, 2024 12:13 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. இங்கு, 1,300க்கும் மேற்பட்ட தெருக்களில், 87,000த்திற்கும் மேலான குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதிக்கு, மீஞ்சூரின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், தினசரி 12 எம்.எல்.டி., குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சில நேரங்களில், மீஞ்சூர் அலகில் பிரச்னை ஏற்பட்டால், புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து, ராட்சத குழாய் வழியாக, சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படும்.
திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளுக்கு உதவி பொறியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், ஆறு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஒருவர் இரண்டு அல்லது மூன்று வார்டுகளை சேர்த்து கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக, குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் சிறு பிரச்னைகளை கூட, உடனடியாக தீர்க்க முடியாத நிலை உள்ளது.
மணலி
மணலியில், எட்டு வார்டுகளில், 1.30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கும், மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புழல் நீர்த்தேக்கம் மற்றும் நிலத்தடி நீர் வழியாக குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.
தினசரி, 9.1 எம்.எல்.டி., குடிநீர் வினியோகமாகும் நிலையில், அங்கும் உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, குடிநீர் வாரியம் சுதாரித்து, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வடகிழக்கு பருவமழையால், இவ்விரு மண்டலங்களும் கடுமையாக பாதிக்கும் என்பதால், குடிநீர் சீராக வினியோகம் செய்ய போதிய அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.