/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் காணாமல் போன தண்ணீர் பந்தல்
/
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் காணாமல் போன தண்ணீர் பந்தல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் காணாமல் போன தண்ணீர் பந்தல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் காணாமல் போன தண்ணீர் பந்தல்
ADDED : மார் 21, 2024 12:40 AM

சென்னை, கோடையில் தாகத்தை தணிக்க, குடிநீர் முக்கியம். இதனால் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், நலச்சங்கத்தினர், போலீசார், தனிநபர்கள் தண்ணீர் பந்தல் வைத்து, தாகம் தணிப்பர்.
சில இடங்களில், கட்சிக்கு விசுவாசமான அடிமட்ட தொண்டர்கள், தினமும் குடிநீர் வைத்து பந்தலை கண்காணிப்பர். வியாபாரிகள், நலச்சங்கத்தினர், தனிநபர்கள் வைக்கும் பந்தல்களில், கோடை முடியும் வரை குடிநீர் இருக்கும்.
தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கட்சியினர் தண்ணீர் பந்தல்கள் வைப்பதில்லை. வியாபாரிகள், நலச்சங்கத்தினர் வைக்க முன்வந்தாலும், போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.
போலீசார், தேர்தல் நடத்தும் அந்தந்த பகுதி அலுவலரிடம் அனுமதி பெற அனுப்புவர். இந்த அலைக்கழிப்பை நினைத்து, பலர் தண்ணீர் பந்தல் வைப்பதை தவிர்த்து விடுவர். சில இடங்களில், போலீசார் தானாக முன்வந்து தண்ணீர் பந்தல் வைத்துள்ளனர்.
இதேபோல் வியாபாரிகள், நலச்சங்கத்தினர், தனிநபர்கள் தண்ணீர் பந்தல் வைக்க, கட்சி சார்பு இல்லாமல் முன்வந்தால், போலீசார் அலைக்கழிக்காமல் அனுமதி வழங்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

