தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ' வாட்டர் ரோலர் ' குட்டீஸ் உற்சாகம்

 ' வாட்டர் ரோலர் ' குட்டீஸ் உற்சாகம்

 ' வாட்டர் ரோலர் ' குட்டீஸ் உற்சாகம்


ADDED : மார் 09, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணுார்: எண்ணுார் படகு குழாமில் இடம்பெற்றுள்ள வாட்டர் ரோலர் விளையாட்டு சாதனம், சிறுவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மணலி மற்றும் மாதவரம் ஏரிகள், 15 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு படகு குழாம் அமைக்கப்பட்டது.

இங்கு, எட்டு பேர் செல்லக்கூடிய விசைப்படகு, நான்கு மற்றும் இரண்டு பேர் பயணிக்கும் மிதி படகுகள் மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்டவை உள்ளன.

கூடுதலாக, சிறுவர்களு க்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டு, எண்ணுார், அன்னை சிவகாமி நகர், ரயில்வே குளம், 4.62 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, படகுகள் வசதியுடன் சிறுவர்களுக்கான, 'வாட்டர் ரோலர்கள்' இடம்பெற்றுள்ளன. இது, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நபருக்கு 10 நிமிடங்கள் வாட்டர் ரோலரில் விளையாட, 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது போல், மணலி ஏரியிலும் வாட்டர் ரோலர் இயக்க முடியுமா என்பதை மாநகராட்சி மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் கவனித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us