/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மாதமாக குடிநீர் 'கட்' காலி குடங்களுடன் மறியல்
/
ஒரு மாதமாக குடிநீர் 'கட்' காலி குடங்களுடன் மறியல்
ADDED : அக் 01, 2025 02:34 PM

அம்பத்துார்,
ஒரு மாதமாக குடிநீர் வழங்காத குடிநீர் வாரியத்தை கண்டித்து, அம்பத்துாரில் நேற்று, காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்துார், ஒரகடம், அண்ணா சாலை பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, அப்பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள் மற்றும் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர், அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த தடம் எண் '120எப்' பேருந்தை சிறைபிடித்தனர். காலி குடங்களுடன் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீராக குடிநீர் வழங்குவதாக வாரிய அதிகாரிகள் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.