ADDED : பிப் 13, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால், தன் முழு கொள்ளளவான, 3.23 டி.எம்.சி., நீர் நிறைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்த நீர், நேற்று முதல், நின்று போனது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் 3.23 டி.எம்.சி., நீர் உள்ளது.