/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் குதிரைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு
/
மெரினாவில் குதிரைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பு
ADDED : ஏப் 08, 2025 11:53 PM

சென்னை, மெரினா கடற்கரை பகுதிகளில், சுற்றுலா பயணியருக்காக, குதிரை சவாரி உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குதிரைக்கு தண்ணீர் குடிக்கும் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, தற்போது நான்கு இடங்களில் குதிரை தண்ணீர் குடிப்பதற்கென தொட்டிகளை அமைத்துள்ளனர்.
'சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக குதிரைகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலா பயணியர் குதிரை சவாரியில் ஈடுபடும் குதிரைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் குதிரைப்படை குதிரைகளும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெரினாவில் குதிரைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி.