/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆற்காடு சாலையில் தேங்கிய தண்ணீர்
/
ஆற்காடு சாலையில் தேங்கிய தண்ணீர்
ADDED : டிச 17, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம்: மெட்ரோ சுரங்கப் பாதை பணியில் ஊற்று நீரை வெளியேற்றும் குழாய் உடைந்து, ஆற்காடு சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது.
இதில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும்போது வரும் ஊற்று நீர், குழாய் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த குழாயில் நேற்று ஏற்பட்ட உடைப்பு ஏற்பட்டதால், குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, மண்டல அலுவலகம் அருகே குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்த புகாரையடுத்து, மெட்ரோ ரயில் ஊழியர்கள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

