/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தர்ப்பூசணி விவசாயி தற்கொலை: இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
/
தர்ப்பூசணி விவசாயி தற்கொலை: இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
தர்ப்பூசணி விவசாயி தற்கொலை: இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
தர்ப்பூசணி விவசாயி தற்கொலை: இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 19, 2025 12:26 AM

பவுஞ்சூர், கடன் தொல்லையால் தற்கொலை செய்த தர்ப்பூசணி விவசாயியின் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யூர் அடுத்த மடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 35; விவசாயி. இவர், 5 ஏக்கர் நிலத்தில், மூன்று ஆண்டுகளாக தர்ப்பூசணி விவசாயம் செய்தார். ஆனால், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.
கடந்தாண்டு மட்டும், 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, தர்ப்பூசணி பயிரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லோகநாதன், கடந்த 8ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், லோகநாதன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பவுஞ்சூர் தோட்டக்கலைத் துறை அலுவலகம்முன், விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.