ADDED : பிப் 20, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், செம்பியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தின் 44வது வார்டில் உள்ள மாணிக்க விநாயகர் கோவில் தெரு மற்றும் மேல்பட்டி பொன்னப்பன் தெரு சந்திப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால், போதிய மாற்று ஏற்பாடு செய்யாததால் பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சமரசம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

