/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கெத்து காட்டியதால் ரவுடியை வெட்டினோம் * கைதான வாலிபர் வாக்குமூலம்
/
கெத்து காட்டியதால் ரவுடியை வெட்டினோம் * கைதான வாலிபர் வாக்குமூலம்
கெத்து காட்டியதால் ரவுடியை வெட்டினோம் * கைதான வாலிபர் வாக்குமூலம்
கெத்து காட்டியதால் ரவுடியை வெட்டினோம் * கைதான வாலிபர் வாக்குமூலம்
ADDED : ஜன 19, 2025 10:07 PM
சென்னை:'என் தம்பியை கொன்ற நபரை தீர்த்துக்கட்ட தேடியபோது, தானாக முன் வந்து, கெத்து காட்டியதால், ரவுடி வினோத்தை கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டினேன்' என, ரவுடி வல்லரசு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்தவர் வல்லரசு, 25; ரவுடி. இவர், நேற்று முன் தினம் இரவு, தன் கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ தெருவைச் சேர்ந்த ரவுடி வினோத்,23, என்பவரை, அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பாக, வல்லரசு உட்பட, 10 பேரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் வல்லரசு அளித்துள்ள வாக்குமூலம்:
நானும் வினோத்தும் உறவினர்கள் தான். கடந்தாண்டு, என் சகோதரர் கலைவாணனை வினோத்தின் கூட்டாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்தார். அவரை தீர்த்துக்கட்ட, என் கூட்டாளிகளுடன் சேர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ தெருவில் வீடு, வீடாக சென்று தேடினோம்.
அப்போது, 'என்னை மீறி எங்கள் ஏரியாவுக்குள் நீங்கள் எப்படி வரலாம்' என, வினோத் தகராறு செய்து கெத்து காட்டினார். அவர், சில மாதங்களுக்கு முன் தான் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அவரிடம், சம்மந்தமே இல்லாமல் எங்களிடம் மோத வேண்டாம் என, எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். நாங்கள் தேடி வந்த நபரை காப்பாற்றுவதற்காக, எங்களிடம் தகராறு செய்வது போல நாடகமாடினார். இதனால், அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து ,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பினோம்.
இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெட்டுப்பட்ட வினோத், சென்னை சென்ட்ரலில் உள்ள, ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.