/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுபமுகூர்த்த தினத்தில் களைகட்டிய கோவில்கள்
/
சுபமுகூர்த்த தினத்தில் களைகட்டிய கோவில்கள்
ADDED : பிப் 12, 2024 02:16 AM

திருத்தணி:திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர திருத்தணி முருகன் கோவிலில், தேவஸ்தானம் சார்பில் வள்ளி மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம், விநாயகர் மண்டபம் மற்றும் ஆர்.சி.மண்டபம் ஆகிய இடங்களில் திருமணங்கள் நடத்தி வைக்கப் படுகின்றன.
இந்நிலையில் நேற்று சுபமுகூர்த்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் மட்டும், 45 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதே போல் திருத்தணி நகரத்தில் தனியார் மண்டபங்களில், 75 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
மேற்கண்ட திருமண நிகழ்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் என, ஆயிரக்கணக்கானோர் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகளில் திருத்தணி நகரத்திற்கு வந்ததால், திருத்தணியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.