/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கமிஷனரிடம் நலச்சங்கத்தினர் மனு
/
மாநகராட்சி கமிஷனரிடம் நலச்சங்கத்தினர் மனு
ADDED : மே 15, 2025 12:26 AM
தாம்பரம், குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கத்தை சேர்ந்தவர்கள், அதன் தலைவர் சந்தானம் தலைமையில், நேற்று முன்தினம், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தரை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி முழுவதும், ஒ. எஸ்.ஆர்., நிலங்களை கண்டறிந்து கையகப்படுத்த வேண்டும். 28 வது வார்டு, நியுகாலனி பகுதிக்கு பூங்கா அமைக்க வேண்டும். பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீராக பரமாரிக்க வேண்டும்.
குரோம்பேட்டையில், சுதந்திர போராட்ட தியாகி பரலி சு. நெல்லையப்பர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்திற்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளன. அவற்றை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் சிறிய அரங்கம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.