/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்காக நல வாரிய உதவி மையம் துவக்கம்
/
துாய்மை பணியாளர்களுக்காக நல வாரிய உதவி மையம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்காக நல வாரிய உதவி மையம் துவக்கம்
துாய்மை பணியாளர்களுக்காக நல வாரிய உதவி மையம் துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 12:21 AM
சென்னை, தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் சேருவோருக்கு, அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த வாரியத்தில் சென்னையில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துாய்மை பணியாளர்களும் பயன்பெறும் வகையில், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் உதவி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள உதவி மையத்தை மேயர் பிரியா துவக்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
நல வாரியத்தில் உறுப்பினராக சேரும் அனைத்து வகையான தற்காலிக பணியாளர்ளுக்கும், விபத்து காப்பீடு, இயற்கை மரண உதவி தொகை, ஈமசடங்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
எனவே, துாய்மை நல வாரியத்தில் அனைத்து துாய்மை பணியாளர்களும் இணைந்து பயன்பெற வேண்டும் என, மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.