/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேற்கு வங்க வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
/
மேற்கு வங்க வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : செப் 02, 2025 01:59 AM
போரூர்;கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி, மேற்கு வங்க வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் மண்டல், 40. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர், போரூர் மசூதி தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தங்கி, ஒரு மாதமாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் எலக்ட்ரிக் இயந்திரம் வாயிலாக, கம்பியை வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி, மயங்கி விழுந்தார்.
அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
போரூர் போலீசார் அவரது உடலை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஞ்சித் மண்டல் உடலை, சொந்த ஊர் எடுத்து செல்ல தேவையான பணம் இல்லாததால், அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் நிதி உதவி திரட்டி வருகின்றனர்.