/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்
/
காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்
காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்
காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 10, 2025 12:30 AM

கே.கே.நகர், காவல் நிலையத்திற்கு சென்ற பள்ளி மாணவர்கள், அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
காவலர் தினத்தை முன்னிட்டு, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவர்கள் அறியும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கே.கே.நகர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.
கே.கே., நகரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 45 பேர், காவல் நிலையம் சென்றனர். காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து, இன்ஸ்பெக்டர் ரத்தினக்குமார் விவரித்தார்.
அப்போது, 'காவல் நிலையங்களில் புகார் அளிக்க வயது வரம்பு இல்லை. பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்' என்றார். சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு அன்றாட அலுவல்கள் குறித்தும் விவரித்தார்.
காவல் நிலைய கணினி அறை, ஆய்வாளர் அறை, தகவல் பலகை மற்றும் கோப்புகளை பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
அதேபோல், மதுரவாயல் காவல் நிலையத்திற்கு, பள்ளி மாணவர்கள், 60க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களுக்கு, கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித்குமார் ஆசிரியராக மாறி, காவல் நிலைய பணிகள் குறித்து பாடம் நடத்தினார்.