ADDED : ஜன 22, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 2011ல், 'சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்கப்படும்' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, தற்போது வரை கிடப்பில் உள்ளது.
இதுகுறித்து புத்தக விற்பனையாளர்கள் கூறியதாவது:
'பபாசி' எனும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் துவக்கப்பட்டு, 47 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 2011ல் புத்தக காட்சியை துவக்கி வைத்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'புத்தக வாசிப்பு பழக்கத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க, சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்கப்படும். அதற்காக, தமிழக அரசு சார்பில் இடம் ஒதுக்கப்படும்' என அறிவித்தார்.
ஆனால், தற்போது வரை புத்தக பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவக்கப்படவில்லை. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.