/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சார்ஜ்' செய்தபோது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்
/
'சார்ஜ்' செய்தபோது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்
ADDED : பிப் 18, 2025 03:59 AM

திருமங்கலம் : அண்ணா நகர் மேற்கு, திருமூலர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், தன், 'ஐ - டிரஸ்ட்' எலக்ட்ரிக் பைக்கை, இரவு நேரங்களில் 'சார்ஜ்' போடுவது வழக்கம்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. தினேஷ் வெளியே வந்து பார்த்தபோது, எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. அத்துடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பஜாஜ் பல்சர் பைக் மற்றும் மற்றொரு 50 சிசி எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் தீப்பிடித்தது.
ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள், முதலில் இரண்டு வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, கொழுந்துவிட்டு எரிந்த எலக்ட்ரிக் பைக்கில், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

