/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் பேனர்கள் அதிகரிப்பு தீராத தலைவலிக்கு தீர்வு எப்போது?
/
கோயம்பேடில் பேனர்கள் அதிகரிப்பு தீராத தலைவலிக்கு தீர்வு எப்போது?
கோயம்பேடில் பேனர்கள் அதிகரிப்பு தீராத தலைவலிக்கு தீர்வு எப்போது?
கோயம்பேடில் பேனர்கள் அதிகரிப்பு தீராத தலைவலிக்கு தீர்வு எப்போது?
ADDED : மார் 07, 2024 12:32 AM

கோயம்பேடு,
கோயம்பேடில், புதிய மற்றும் பழைய மேம்பாலங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் கடும் உத்தரவு பிறப்பித்தன.
ஆனால், இந்த உத்தரவை யாரும் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. மேலும், அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இதனால், நகரின் பல பகுதிகளில் மீண்டும் விளம்பர பலகைகள் அதிகரித்துள்ளன. இதில், சென்னையில் பிரதான பகுதிகளில் ஒன்றாக உள்ள கோயம்பேடில், விளம்பர பலகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள புதிய மற்றும் பழைய மேம்பாலங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களில், பேனர்கள் வரிசைகட்டி வைக்கப்பட்டு உள்ளன.
இது, 100 அடி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
இதனால், விளம்பர பலகைகள் வைப்பதை கட்டுப்படுத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

