ADDED : ஜூன் 11, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓ.எம்.ஆரில் மூடு கால்வாய் அமைப்பது எப்போது?
சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், எழில்முகநகர், சுனாமி குடியிருப்பு பகுதியில், ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்க, பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் வகையில், ஓ.எம்.ஆர்., குறுக்கே, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை மற்றும் மகாநகர் பிரதான சாலையில் மூடு கால்வாய் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.
பணி காலதாமதம் ஆவதால், வரும் பருவமழைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். கலெக்டரிடம் பலமுறை கடிதம் வழங்கிவிட்டோம். வெள்ள பாதிப்பை உணர்ந்து, மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறையினர் மூடு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- அ.தனசேகர்,
செம்மஞ்சேரி.

