/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முனுசாமி நகரில் வடியாத மழைநீர் 20 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு எப்போது?

ADDED : டிச 02, 2024 01:42 AM

மேடவாக்கம்:பள்ளிக்கரணை அடுத்த, மேடவாக்கம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு, 1,970களில் முதன் முதலாக உருவான முனுசாமி நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, இப்பகுதியில் சாலை, வடிகால் வசதி இல்லாததால், இப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
பகுதிவாசிகள் கூறியதாவது:
சிறு மழைக்கே, வீடுகளுக்குள் நீர் புகுந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பிரதான சாலையில் உள்ள வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், இங்குதான் தஞ்சமடைகிறது.
குழந்தைகள், பெண்கள், முதியோர், மாணவர்கள் மழைக்காலத்தில் பெரும் அவதியை சந்திக்கின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.