/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு எப்போது? பதிலளிக்க திணறும் மீன்வளத்துறை அதிகாரிகள்
/
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு எப்போது? பதிலளிக்க திணறும் மீன்வளத்துறை அதிகாரிகள்
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு எப்போது? பதிலளிக்க திணறும் மீன்வளத்துறை அதிகாரிகள்
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு எப்போது? பதிலளிக்க திணறும் மீன்வளத்துறை அதிகாரிகள்
ADDED : ஜன 22, 2025 12:37 AM
திருவொற்றியூர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், 1980ல், 570 படகுகள் கையாளும் விதமாக கட்டப்பட்டது. பின், 2,000 படகுகள் கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இடப்பற்றாக்குறை நிலவியது.
ராட்சத கற்கள்
தீர்வாக, 2019ல், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து, திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில், 200 கோடி ரூபாய் மதிப்பீடில் சூரை மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணி துவங்கியது.
அலையில் சீற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர, தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அலை தடுப்புச் சுவர் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2,000 முதல் 8,000 கிலோ வரையிலான பெரிய பாறாங்கற்கள், நட்சத்திர கான்கிரீட் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தவிர, பல்வேறு பிரிவுகளாக, 1,815 அடி துாரத்திற்கு, சிறிய - பெரிய படகுகள் அணையும் தளங்கள் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
டிச., இறுதிக்குள், சூரை மீன்பிடித்துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 சதவீத பணிகள் மீதமுள்ளன.
மீனவர்கள் கருத்து
மேலும், தென்கிழக்கு - வடகிழக்கு அலை தடுப்புச் சுவர்கள் இணையும் பகுதியில், அதிக இடைவெளி இருப்பதால், அலைகள் வேகமாக துறைமுகத்திற்குள் உட்புகுகின்றன. இதனால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமாகும்.
புயல், சூறாவளி, காற்றழுத்த தாழ்வு நிலை கனமழையின் போது, சீறும் அலைகளால் படகுகள் பாறைகளில் மோதி, உடையக்கூடும்.
இதன் காரணமாக, திருத்திய மதிப்பீடாக, 272 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் கட்டியும் பலனில்லை என, துவக்கம் முதலே, அப்பகுதி மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், எம்.பி., அமைச்சரிடம் தொடர்ந்து, மனுக்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதற்கு தீர்வு எட்டியபாடில்லை.
எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, கூடுதலாக, 330 அடி துாரம் நீட்டித்தால், துறைமுகத்தினுள் அலைகள் உட்புகும் பிரச்னைகள் இருக்காது.
பேரிடர் காலங்களில் படகுகளை பத்திரப்படுத்த துறைமுகம் பயனுள்ளதாக இருக்கும் என, மீனவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுவர் நீட்டிப்பு
சூரை மீன்பிடித்துறைமுகம் திறப்பு மற்றும் தென்கிழக்கு அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் போனை எடுப்பதில்லை. போனை எடுக்கும் சிலரும், பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர்.