/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கி உருக்குலைந்த காரில் டயர்கள் கூட விட்டு வைக்காத திருடர்கள் போலீசார் எங்கே?

ADDED : ஜன 18, 2025 12:32 AM

திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர், 44. கடந்த 6ம் தேதி, தன் 'வோக்ஸ் வேகன் - போலோ' காரில், மனைவி கோதைநாயகி, 4, மகள் தக்க்ஷனா, 18, மகன் சுதர்சன், 13, ஆகியோருடன், திருப்பதி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். காரை சுதாகர் ஓட்டினார்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அரசு கலைக் கல்லுாரி அருகே, எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மீது கார் நேருக்குநேர் மோதியது.
இதில், சுதாகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி, மகள், மகன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய காரை, திருத்தணி போலீசார் சாலையோரம் அப்புறப்படுத்தினர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும் காவல் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லவில்லை.
இந்த நிலையில், காரின் மூன்று சக்கரங்கள், இன்ஜினில் உள்ள முக்கிய உதிரிபாகங்கள், பேட்டரி உட்பட 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாகங்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது என, பகுதிவாசிகள் சாட்டினர்.
மேலும், அவர்கள் கூறுகையில், 'இன்னும் சில நாட்கள் கார் அங்கே இருந்தால், காரின் தடம் தெரியாத அளவிற்கு திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பர்' என, தெரிவித்தனர்.