/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
297 கிலோ தங்கம் எங்கே? தேவநாதனிடம் விசாரணை
/
297 கிலோ தங்கம் எங்கே? தேவநாதனிடம் விசாரணை
ADDED : செப் 20, 2024 11:57 PM
சென்னை, மயிலாப்பூர் 'ஹிந்து பர்மனன்ட் பண்டு' நிதி நிறுவன தலைவர் தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.
தேவநாதனை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அப்போது, 24.50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், 300 கிலோ நகை என்ன ஆனது என்பது புதிராக இருந்தது. இதனால், தேவநாதனை, மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அங்கிருந்து, 3 கிலோ தங்க நகை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
மீதமுள்ள, 297 கிலோ தங்கம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருந்தது. அதற்குள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மயிலாப்பூரில் 'மனு மேளா' நிகழ்ச்சி நடத்தினர். இதில், தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, 4,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மேலும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். முதற்கட்டமாக லோக்சபா தேர்தலின் போது, சிவகங்கை தொகுதியில் போட்டியிட தேவநாதன் நகைகளை விற்றது தெரியவந்துள்ளது.
எங்கு, எவ்வளவு நகைகளை விற்றார் என்பது குறித்தும், 525 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளதால், அது தொடர்பாக, 3,000 கேள்விகள் தயாரித்து, தேவநாதனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.