/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துார் பெண்ணை கொன்றது ஏன்? கான்பூரில் கைதானவர் வாக்குமூலம்!
/
கொளத்துார் பெண்ணை கொன்றது ஏன்? கான்பூரில் கைதானவர் வாக்குமூலம்!
கொளத்துார் பெண்ணை கொன்றது ஏன்? கான்பூரில் கைதானவர் வாக்குமூலம்!
கொளத்துார் பெண்ணை கொன்றது ஏன்? கான்பூரில் கைதானவர் வாக்குமூலம்!
ADDED : ஜூலை 25, 2025 12:27 AM

சென்னை :கொளத்துார் பெண்ணை கொலை செய்து தப்பிய நபரை, கான்பூரில் போலீசார் கைது செய்தனர்.
கொளத்துாரில் வசித்த சரஸ்வதி, 38, சில தினங்களுக்கு முன், அவரது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வழக்கில், உ.பி., மாநிலம் கான்பூரைச் சேர்ந்த மொய்சீன் அன்சாரி, 38, என்பவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை, அங்கு உள்ள காவல் நிலையத்தில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார், சென்னை அழைத்து வரவுள்ளனர்.
சரஸ்வதி கொலை குறித்து, மொய்சீன் அன்சாரி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:
சரஸ்வதிக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவர் கணேசமூர்த்தி, இரு மகன்களுடன் வசித்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக கொளத்துாரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது, அண்ணா நகரில் வேலை பார்த்து வந்த மொய்சீன் அன்சாரி யிடம் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அன்சாரியை காதலிப்பதாக கூறிய சரஸ்வதி, திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு நடந்த திருமணத்தையும் சரஸ்வதி மறைத்துள்ளார். தன் இரு மகன்களையும், உறவினர் பிள்ளைகள் என்றும், கணவரை அண்ணன் என்றும் அன்சாரியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சரஸ்வதியும் மொய்சீன் அன்சாரியும், அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளனர்.
சம்பவ நாளன்று, சரஸ்வதியும் அன்சாரியும், இரண்டு மது பாட்டில்கள் வாங்கி, முழுதாக குடித்துள்ளனர். அப்போது சரஸ்வதியை, மொபைல் போனில் பல ஆண்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
இந்த அழைப்புகள் குறித்து கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்சாரி, சரஸ்வதியை தாக்கி தள்ளிவிட்டதில் அவர் இறந்துள்ளார்.
இதனால் பயந்து போன அன்சாரி, சரஸ்வதியின் மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, அண்ணா நகரில் தங்கியிருந்த அறையையும் காலி செய்து, சொந்த ஊருக்கு தப்பியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

