/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதி கணவருக்கு கஞ்சா அனுப்பிய மனைவி கைது
/
கைதி கணவருக்கு கஞ்சா அனுப்பிய மனைவி கைது
ADDED : நவ 28, 2024 12:35 AM
திருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்த பிரித்விராஜ், 25; கஞ்சா வியாபாரி. மணலி சீனிவாசன் தெருவைச் சேர்ந்த ஜோஸ்வா, 24. தாம்பரத்தைச் சேர்ந்த பரத், 25. மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவற்காக, சிறையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு, ஆயுதப்படை போலீசார் அழைத்து வந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவர்கள் கையில், கஞ்சா பொட்டலம் இருப்பதை, பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் கண்டுபிடித்தனர். பின், மூவரையும் திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கஞ்சா வழக்கில் தொடர்புடைய, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நந்தினி, 22, சிறையில் உள்ள தன் கணவர் விஜய்க்கு, கஞ்சா பொட்டலத்தை கொடுத்தனுப்ப முயன்றது தெரிய வந்தது. இதற்கு, திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த முரளி, 23, யோகேஸ்வரன், 22, ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நந்தினி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.