/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா பதுக்கி விற்ற ஐ.டி., ஊழியர் போலீசில் காட்டி கொடுத்த மனைவி
/
கஞ்சா பதுக்கி விற்ற ஐ.டி., ஊழியர் போலீசில் காட்டி கொடுத்த மனைவி
கஞ்சா பதுக்கி விற்ற ஐ.டி., ஊழியர் போலீசில் காட்டி கொடுத்த மனைவி
கஞ்சா பதுக்கி விற்ற ஐ.டி., ஊழியர் போலீசில் காட்டி கொடுத்த மனைவி
ADDED : ஜூலை 02, 2025 12:23 AM
திருவொற்றியூர், திருவொற்றியூரில், வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற கணவரை, போலீசில் காட்டிக் கொடுத்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர், ரேடியன்ஸ் அப்பார்ட்மென்டைச் சேர்ந்தவர் ராஜா, 28. இவர், அண்ணா சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிகிறார். ராஜாவும், அவரது மனைவியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதோடு, வீட்டில் கஞ்சா விற்பனை செய்ய எடை போட்டு பொட்டலம் போட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தட்டிக்கேட்டுள்ளார்.
இதில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், ராஜா அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டவர், தன் கணவர் ராஜா வீட்டில் கஞ்சா மறைத்து விற்பதாக தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டில் சோதனையிட்டபோது கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து நடத்திய விசாரணையில், திருவொற்றியூர், வடக்கு ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான ஹரிஹரன், 25, என்பவரிடமிருந்து, கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஹரிஹரனிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கினாய் என கேட்டபோது, 'வீடியோ காலில் பேசினால், ஒருவர் கஞ்சா கொண்டு வந்து தருவார்; அவரது விபரம் தெரியாது' என்றார்.
இதையடுத்து ராஜா, ஹரிஹரன் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.