/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொதிக்கு எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி
/
கொதிக்கு எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி
ADDED : ஜூன் 12, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானத்துார்,பனையூர், குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 28. இவரது மனைவி சரண்யா, 25. நேற்று, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த சரண்யா, அப்பளம் பொரிக்க சூடாக்கிய எண்ணெயை, சுரேஷ் உடம்பில் ஊற்றி உள்ளார். இதில், காயமடைந்த சுரேஷ் ராயப்பேட்டை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுரேஷ் கூறிய தகவலின்படி, கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.