/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளக்காதலனை காப்பாற்ற முயன்ற மனைவிக்கு கத்திக்குத்து
/
கள்ளக்காதலனை காப்பாற்ற முயன்ற மனைவிக்கு கத்திக்குத்து
கள்ளக்காதலனை காப்பாற்ற முயன்ற மனைவிக்கு கத்திக்குத்து
கள்ளக்காதலனை காப்பாற்ற முயன்ற மனைவிக்கு கத்திக்குத்து
ADDED : ஜூலை 19, 2025 12:13 AM
ஆவடி, கள்ளக்காதலனை காப்பாற்ற முயன்ற மனைவியின் முதுகில் கத்தியால் குத்திய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, கொள்ளுமேடு, பவானி நகரைச் சேர்ந்தவர்விக்னேஷ் குமார், 33. இவரது மனைவி சங்கீதா, 26. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இருவரும், காட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சங்கீதாவிற்கும், அதே நிறுவனத்தில் பணியாற்றும்பரணி, 34, என்பவருக்கும்இடையே, கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதை விக்னேஷ் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், சங்கீதாவும் பரணியும், வீட்டு வாசலில் நின்று, நேற்று முன்தினம் இரவு பேசிக் கொண்டிருந்தனர். ஆத்திரமடைந்த விக்னேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, பரணியை குத்த முயன்றுள்ளார்.
இதை தடுக்க முயன்ற சங்கீதாவின் முதுகில், விக்னேஷ் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சங்கீதாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், விக்னேஷை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.