sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கணவரை கொன்று மூட்டை கட்டி கால்வாயில் வீசிய மனைவி கைது போதையில் தினமும் துன்புறுத்தியதால் ஆத்திரம்

/

 கணவரை கொன்று மூட்டை கட்டி கால்வாயில் வீசிய மனைவி கைது போதையில் தினமும் துன்புறுத்தியதால் ஆத்திரம்

 கணவரை கொன்று மூட்டை கட்டி கால்வாயில் வீசிய மனைவி கைது போதையில் தினமும் துன்புறுத்தியதால் ஆத்திரம்

 கணவரை கொன்று மூட்டை கட்டி கால்வாயில் வீசிய மனைவி கைது போதையில் தினமும் துன்புறுத்தியதால் ஆத்திரம்

3


ADDED : மார் 08, 2026 05:37 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:37 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா நகரில், கணவரை கத்தியால் குத்தி கொ லை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி ஓட்டேரி நல்லான் கால்வாயில் வீசிய மனைவியை போலீ சார் கைது செய்தனர்.

அண்ணா நகர் கிழக்கு, 'ஓ' பிளாக், 29வது தெருவில், ஓட்டேரி நல்லான் கால்வாய் உள்ளது. அதில், சாக்கு பையில் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு, கடந்த 5ம் தேதி தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.

இதில், பெண் ஒருவர், சாக்கு மூட்டையை கால்வாயில் வீசி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், அண்ணா நகர் கிழக்கு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த அம்பிகா, 57, என்பவர், அவரது கணவர் சந்தானம், 60, என்பவரை, கத்தியால் குத்தி கொலை செய்து, கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் இரவு அம்பிகாவை பிடித்து விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், 28ம் தேதி இரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த சந்தானம், வழக்கம் போல் அம்பிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், காய்கறி வெட்டும் கத்தியால், கை மற்றும் கால்களில் வெட்டியுள்ளார். சிறிது நேரத்திலேயே ரத்தம் அதிகமாக வெளியேறி, சந்தானம் உயிரிழந்துள்ளார்.

பின், வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டிற்கு சென்ற அம்பிகா, மூன்று நாட்கள் கழித்து வந்துள்ளார்.

அப்போது, உடல் அழுகி கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால், சாக்கு பையில் கணவரின் உடலை கட்டி, அருகே உள்ள ஓட்டேரி நல்லான் கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

போலீசார், அம்பிகாவை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us