ADDED : ஏப் 01, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், சத்தியா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முருகன், 37. நேற்று முன்தினம் இரவு, குடி போதையில் வீட்டுக்கு வந்த முருகனை, அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதில் அதிருப்தியடைந்த அவர், படுக்கை அறைக்கு புடவையால் துாக்கிட்டு தொங்கினார். பக்கத்து வீட்டினர் உதவியுடன் கணவரை மீட்ட மனைவி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால், வரும் வழியிலே முருகன் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு, மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
